தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிப்பதாக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தேனியில் இடைவிடாது பெய்த கன மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, சின்னச்சுருளி ஆகிய 3 அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாபயணிகளுக்கு குளிக்க தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்தது. இந்நிலையில் மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாபயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி அளிப்பதாக வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.