தென்காசி அருகே நடைபெற்ற பூப்புனித விழாவில் மேள தாளங்கள் முழங்க விழாக் காணும் பெண் பல்லக்கில் அழைத்து வரப்பட்டார்.
சொக்கம்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன், இவரின் தங்கை மகளின் பூப்புனித நீராட்டு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக விஸ்வநாதன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக மனித உருவ பொம்மைகளுடன், மேளம் தாழம் முழங்க, சீர்வரிசை கொண்டு வந்தார். மேலும் விழாக்காணும் பெண் பல்லக்கில் ஊர்வலமாக வந்தது காண்போரை கவரச் செய்தது.