ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சொத்து தகராறில் மருமகளை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.
முத்துவிஜயபுரத்தைச் சேர்ந்த உமாவின் கணவர் உயிரிழந்த நிலையில், அவரது மாமனார் ஜேசுவுடன் பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஜேசு, கடந்த 20-ம் தேதி தனது மருமகள் உமா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த உமா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், புகாரின் பேரில் ஜேசுவை போலீசார் கைது செய்தனர்.