சென்னை, விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் விமான நிறுவனங்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒரு வாரத்தில் வெடிக்கும் என்றும் இமெயில் மூலம் தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவனங்கள் விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல்களை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இது ஒரு போலி தகவல் என்றும் , மர்ம நபர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.