ஆந்திராவில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், ராகேஷ், ராதா பிரியா, கோபி ஆகிய 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சத்யா என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.