கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்ட போலீசார், கஞ்சா விற்பனை செய்து வந்த காந்தி நகரைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
















