முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு, பொம்மி உள்பட இளம் வயது யானைகளுக்கு சிறப்பு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆஸ்கார் விருதுபெற்ற தி எலிபாண்ட் விஷ்பிரஸ் குறும்படத்தில் நடித்த ரகு, பொம்மி உள்பட இளம் வயது யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
பயிற்சியின்போது சுட்டித்தனமாக நடந்துகொண்ட ரகு, பொம்மி குட்டி யானைகளின் செயல் காண்போரை வெகுவாக கவர்ந்தது.