கொடிய எபோலா வைரஸ் உருவாக்கிய சீனா: 3 நாட்களில் மரணம் உறுதி!
Oct 21, 2025, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடிய எபோலா வைரஸ் உருவாக்கிய சீனா: 3 நாட்களில் மரணம் உறுதி!

Web Desk by Web Desk
May 28, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிகவும் கொடிய எபோலா வைரஸை ஆய்வகத்தில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு பணிகளுக்காக இந்த வைரஸை உருவாக்கியிருப்பதாக சீனா தெரிவித்தாலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மிகவும் ஆபத்தான எபோலா வைரஸ் நோய் முன்பு எபோலா ரத்தக் கசிவு காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் தான் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

1976ஆம் ஆண்டு முதல்முதலில் எபோலா, ஒரே நேரத்தில் தெற்கு சூடானில் உள்ள நசாராவிலும், ஆப்ரிக்கா நாடான காங்கோவிலும் தோன்றியது.

5 வகையான எபோலா வைரஸ்களில், நான்கு வைரஸ்கள் மனிதர்களைப் பாதிக்கக் கூடியதாக இருப்பதே இந்நோயின் ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்த எபோலா நோய், சிம்பன்சிகள், முள்ளம்பன்றிகள், பழ வவ்வால்கள், குரங்குகள், போன்ற காட்டு விலங்குகளிடமிருந்து இந்த நோய் மக்களுக்கு பரவுகிறது. அதன் பிறகு ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு எளிதாக பரவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டுக்குப் பிறகு எபோலா வைரஸ் நோய் தாக்கம் உலகில் அதிகமான நிலையில் , இப்போது, எபோலா வைரஸ் வேறு புதிய வடிவங்களில் மனிதர்களைச் அச்சுறுத்தி வருகிறது .

இந்நிலையில், ஒரு அற்புதமான ஆனால் சர்ச்சைக்குரிய ஆய்வை, ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.

எபோலா வைரஸை நன்கு புரிந்துகொள்ளும் முயற்சியாக செய்யப்பட்ட இந்த ஆய்வில், எபோலா வைரஸில் இருக்கும் (glycoprotein) கிளைகோபுரோட்டீனைப் பயன்படுத்தி, ஒரு புதிய வைரஸை சீன விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். அதனை வெள்ளெலிகளுக்குச் செலுத்தி பரிசோதனை செய்தனர்.

வெள்ளெலிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் இறந்துவிட்டன. உடல் உறுப்புகளில் பல செயலிழந்து இறந்த வெள்ளெலிகளும், எபோலா நோய் பாதிக்கப்பட்ட மனிதரிகளிடம் காணப்பட்டதைப் போன்றே கடுமையான நோய் தாக்கங்கள் இருந்தன என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

எபோலா வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிவதற்கும், அதன் மூலம், நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உருவாக்கவும், இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழகத்தில், சீன விஞ்ஞானிகள் நடத்திய இந்த எபோலா ஆராய்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறித்தாலும், பெரும் கவலைகளையும் ஏற்படுத்துகிறது.

இப்படித் தான்,ஏற்கெனவே சீன விஞ்ஞானிகள், தனி ஆய்வகத்தில் நடத்திய ஆராய்ச்சியே கொரொனா வைரஸை உலகமெங்கும் பரப்பி, உலகத்துக்கே பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அந்த தாக்கத்தில் இருந்தே இன்னமும் உலகம் வெளிவரவில்லை.

இப்போது எபோலா வைரஸ் ஆய்வு செய்த சீனா, எவ்வளவு தான் பாதுகாப்பு பற்றி சொன்னாலும் ,இந்த ஆராய்ச்சி நெறிமுறை மற்றும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன.

எனவே, சீனா செய்த எபோலா வைரஸ் ஆய்வில் தற்செயலாக அல்லது தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் குறித்து மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chinawhich created the deadly Ebola virus: confirmed death in 3 days!
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சிக்கிய தீவிரவாத கும்பல் சர்வதேச பின்னணி அம்பலம்!

Next Post

சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிறந்தநாள்! – ஆளுநர் ரவி மரியாதை

Related News

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஐஎன்எஸ் விக்ராந் போர் கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி – குடும்பத்தினருடன் கொண்டாடுவதாக பெருமிதம்!

பூமிக்கு அடியில் செல்லும் மின்சார வயரில் மின்கசிவு ; பட்டாசு போல வெடித்ததால் பரபரப்பு!

நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை!

இஸ்ரேல் காசா போர் நிறுத்தத்தை தொடர்ந்து எல்லைக்கோடு அமைக்கும் பணி தீவிரம்!

தொடரும் சீரமைப்பு பணி – உதகை மலை ரயில் 2வது நாளாக ரத்து!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

திமுக எனும் அரக்கனை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – எல்.முருகன் உறுதி!

தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies