தென் மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையேயான தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு நீண்ட கால சராசரியில் 106 சதவீதமாக இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2024-ம் ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மேற்குப் பருவமழைப்பொழிவு இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பை விட அதிகமாகவும், வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும், வடகிழக்கு இந்தியாவில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.