ஆந்திராவில் இருந்து சில்லறை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த செந்தில் என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர் கைப்பையில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து சில்லறை விற்பனைக்காக கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.