கோவில்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ரகசிய தகவலையடுத்து, கரிசல்குளம் காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த 6 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது 6 வேட்டை நாய்களை கொண்டு, 6 முயல்களை வேட்டையாடியது தெரியவந்தது.
இதனையடுத்து, முயல் வேட்டையில் ஈடுபட்ட துறையூரைச் சேர்ந்த பெருமாள், முத்துக்குமார், கட்டபொம்மன், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர்.