ஈரோட்டில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு நடனமாடி அசத்தினர்.
உலக சாதனை படைத்த புகழ்பெற்ற மங்கை வள்ளி கும்மி குழுவின் 132வது அரங்கேற்றம் நிகழ்ச்சி திண்டல் அருகே உள்ள அத்தப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
இதில் சிறுமிகள், இளம் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வள்ளிகும்மியாட்டத்தை அரங்கேற்றினர்.
அனைவரும் ஒரே நிற ஆடையில் ஒரே மாதிரியாக நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.