மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின்போது கேசவன் என்பவரின் வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியில் மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.