தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருவம் தப்பி பெய்த கோடை மழையால் சிறிய வெங்காய பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆலங்குளம், குருவன்கோட்டை, துத்திகுளம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சிறிய வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொட்டி தீர்த்த கனமழையால் சிறிய வெங்காயம் முழுமையாக வளர்ச்சி அடையாமல் தண்ணீரில் மூழ்கி அழுகியது.
மிகப்பெரிய இழப்பீடு சந்தித்துள்ள விவசாயிகள் அரசு உரிய இழப்பீட வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.