புதுக்கோட்டையில் பாதிரியார் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மாலையீடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஜான் தேவசகாயம் என்பவர், கணேஷ் நகர் பகுதியில் வசித்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக கோவை சென்ற அவர், காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிலுள்ள 80 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.