ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே பெருமுகை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சஞ்சீவிழாயன்குளம் நீர்நிலை மற்றும் கரும்பாறை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்றும், கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.