கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் நேவி அணியும், பெண்கள் பிரிவில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியன் நேவி லோனா வில்லா அணியும் இந்தியன் ஏர்போர்ஸ் நியூ டெல்லி அணியும் மோதின.
இதில் 64க்கும் 55 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியன் நேவி லோனா வில்லா அணி வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஹூப்ளி அணி, சென்ட்ரல் ரயில்வே மும்பை அணியை எதிர்கொண்டது.
இதில் 61க்கு 53 என்ற புள்ளி கணக்கில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே சாம்பியன் பட்டத்தை வென்றது.