சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த் , தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் புதிதாக காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர்களிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.