ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கோயில் உண்டியலை மூட்டையில் கட்டி எடுத்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
சஞ்சய் நகரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர், 2 மணி நேரம் காத்திருந்துள்ளார்.
ஆள் நடமாட்டம் குறைந்தவுடன், கோயில் உண்டியலை சாக்குப் பையில் கட்டிக்கொண்ட தலைமறைவானர். இதுகுறித்து கோயில் பூசாரி அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.