இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயரில் போலி விண்ணப்பம் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு google form மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிசிசிஐ, பிரதமர் நரேந்திர மோடி பெயரில் போலி விண்ணப்பம் வந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் உலகின் பிரபலமான பெயர்களிலும் போலி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்ப காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் பல போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.