ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோவில் திருவிழாவையொட்டி, பாய்மர படகு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 26 படகுகள் கலந்துகொண்டன. 10 கடல் மைல் தொலைவு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு படகுக்கும் ஆறு நபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த போட்டியில் நம்புதாளை அம்பலம் முதல் இடமும், தொண்டி புதுக்குடி இளஞ்சியம் அணி 2-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணியினருக்கு சுழல் கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.