தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி தேரோட்டமும், மஹா கும்பாபிஷேக விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்தாண்டம் பம்மம் குளத்தின்கரை பகுதியில் உள்ள சிவசக்தி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் பகவத் கீதை பாராயண ஆண்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது.
2 நாள் விழாவில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தேவிபூஜை உட்பட பல பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வேத பண்டிதர்களால் பூஜிக்கபட்ட புனித நீரால் கும்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.