திருப்பூரில் 2 நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 658 கிலோ குட்கா கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த குட்கா மூட்டைகள் சாலையில் சிதறியது.
தகவலறிந்து ஆயிரத்து 658 கிலோ குட்கா போதைபொருளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தானை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.