நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களான மணிமுத்தாறு மற்றும் மாஞ்சோலை பகுதிக்கு மழை காரணமாக நேற்று வரை அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது மழை குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அணையில் குளிப்பதற்கும், மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.