ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 8 நாட்களுக்கு இந்தப் பணி நடைபெறவுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணியின்போது புலிகளின் நடமாட்டத்தை அறிந்து அடர்த்தியான வனப்பகுதியில் கேமரா பொருத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.