மேற்குவங்கம் மாநிலம், ஹவுரா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ஹவுரா-பந்தேல் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் லிலுவா பகுதி அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சக்கரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுரா-பந்தேல் வழித்தடத்தில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.