உலகப் பட்டினி தினத்தை ஒட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமென அக்கட்சியில் தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சென்னை திருவான்மியூரில் உள்ள குளக்கரையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சம்பந்தி விருந்தை தொடங்கி வைத்ததோடு, மக்களோடு அமர்ந்து உணவருந்தினார். இதேபோன்று, சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேபோன்று, ராமநாதபுரத்தில் தவெக மாணவரணியினர் சார்பில் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சமபந்தி நடைபெற்றது. இதே போன்று, அரசு மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற சமபந்தி விருந்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
இன்று காலை உணவு மதிய உணவு என இன்று ஒரு நாள் வழங்கப்பட்டிருக்கிறது. தளபதி விலை இல்லா உணவகம் 23 இடங்களில் வழங்கப்பட்ட வருகிறது. இந்த பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு புதுச்சேரி கேரளா என பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள மாவட்ட சிவளார்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுமார் இன்று மட்டும் மூன்று லட்சம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று ஒரு நாள் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது தளபதி அறிவுறுத்தலின் படி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் முதியோர் இளைஞர்கள் என அனைவருக்கும் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்படும்.
திருமணங்களில் மீதியாகவும் உணவுகள் இனி எங்களைத் தொடர்பு கொண்டு அந்த உணவுகளை கொடுக்கலாம். ஜூன் 22 விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்களை செய்வோம். கட்சி சமந்தப்பட்ட விஷயங்கள் எதுவா இருந்தாலும் விஜய் தான் அறிவிப்பார்.
சீமானுடன் கூட்டணி என்ற கேள்விக்கு எதுவாக இருந்தாலும் விஜய் கூறுவது தான் என்று தெரிவித்தார்.