கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஆவணங்கள் தொடர்பாக நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.
சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022 ஜூலை 13ம் தேதி விடுதியில் மர்மமான உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களில் சி.டி.-க்களில் பதிவாகியிருந்த வீடியோ மற்றும் ஆடியோ தெளிவாக இல்லாததால், இதுதொடர்பாக, ஸ்ரீமதியின் தாய், தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வீடியோ காட்சிகள் இயக்கப்படாததற்கு காரணம் என்ன? என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி, அடுத்த வழக்கு விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.