பரமக்குடியில், நீல நிற பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கி பல்வேறு வாகனங்களில் அருள் பாலித்த கள்ளழகர், பத்து நாள் திருவிழா முடிந்து கோயிலுக்கு திரும்பினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த மே 22ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரதராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது, நீல நிற பட்டுடுத்தி குதிரை வாகனம், சேஷ, கருட, அனுமன் வாகனங்களில் சுவாமி அருள் பாலித்தார்.
பின்னர் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை. கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து, பத்து நாள் திருவிழா முடிந்து சுவாமி கோயிலுக்கு திரும்பினார்.