புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும், மழை வேண்டியும் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் மூலவருக்கு ஆயிரத்து எட்டு இளநீர்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.