தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சுற்றுவட்டாரத்தில் உளுந்து பயிர்களை மஞ்சள் நோய் தாக்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கணபதிஅக்ரஹாரம், மணலூர், வீரமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில், கோடை சாகுபடியாக விவசாயிகள் உளுந்து மற்றும் பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இப்பயிர்கள் பூ பூக்கும் தருவாயில் உள்ள நிலையில் செடிகளில் ஒரு வித மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் மகசூல் இன்றி வயல்களிலேயே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.