ஈரோடு அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்பகை காரணமாக இளைஞரை குத்திக் கொன்றவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முனியப்பன் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சாணார்மேடு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவரது வாகனத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வெள்ளியங்கிரி என்பவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஹரிஷ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளியங்கிரி ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.