திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது மின்சார கம்பி உரசியதில் லாரியில் இருந்து கரும்புகை கிளம்பிய சிறிது நேரத்திலேயே தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து தீக்கிரையாகி எலும்புக்கூடு போல் காட்சியளித்தது.