அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
சிகாகோவிலிருந்து டாக்கோமா நோக்கி புறப்பட்ட விமானம், ஓடுபாதையில் சென்றபோது அதன் என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது.
விபரீதத்தை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதில் இருந்த 148 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.