ஈரோட்டில் செல்போன் கடைக்குள் புகுந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகே செயல்பட்டு வரும் செல்போன் கடையில் பணி முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்டு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் விலை உயர்ந்த 56 செல்போன்கள், கல்லாவில் வைத்திருந்த 19 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.