மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கடற்கரைகளில் நிறுத்தி வைத்து பழுது பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த விசைப்படகுகளில் இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், மீன்பிடி உரிமம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையிலேயே விசைப்படகுகள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.