அதிகம் பேருக்கு உதவி செய்வதற்காகவே, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தற்போது ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
உலக பட்டினி தினத்தையொட்டி, தேனி பங்களா மேட்டில் உள்ள தனியார் பிரியாணி நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டிவி நடிகர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 2 ஆயிரத்து 500 ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலா, தனக்கு கிடைக்காத உதவி மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சமூக சேவை செய்கிறேன் என்றும், சமூக சேவை விரிவடைவதை காட்டிலும் மக்கள் மனசு நிறைவடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
















