பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு அபூர்வ நோயான ADHD எனப்படும் கவன குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக பகத் பாசில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான ’ஆவேஷம்’ என்ற மலையாள திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் பகத் பாசிலுக்கு திடீரென ADHD என்ற கவன குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு நோய் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ADHD என்பது மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோயால் பாதிப்பு அடைந்தவர்கள் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது, எளிதில் திசை திரும்ப கூடிய தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நோயை சிறு வயதில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றும், ஆனால் பகத் பாசிலுக்கு தற்போது 41 வயதில் கண்டறியப்பட்டதால் குணப்படுத்த முடியுமா? என்பது குறித்தும் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.