திருச்சி அருகே உயர் மின்னழுத்த கம்பத்தை இடமாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தங்கையன் என்பவர், கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
அந்தவகையில் பணிகளை மேற்கொள்வதற்காக வீட்டின் முன்பிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தை இடமாற்றம் செய்யக்கோரி, மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதனையடுத்து மின்வாரிய வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர், வேலையை விரைந்து முடிக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்பழகன் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.