ஈரான் மக்களவை தலைவராக முன்னாள் புரட்சிப் படை தளபதி முகமது பாக்கர் கலிபாஃப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த நிலையில், அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
இதையொட்டி, நடைபெற்ற மக்களவைத் தலைவர் தேர்தலில் முகமது பாக்கர் கலிபாஃப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 287 உறுப்பினர்களில், 198 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.