மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய லாரி ஒன்று மலையில் இருந்து உருண்டு விழும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த ரீமல் புயலின் தாக்கத்தால் சுமாா் 30 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.
பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரீமல் புயல் மணிப்பூரையும் புரட்டி போட்டுள்ளது.
பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி லாரி ஒன்று மலையில் இருந்து உருண்டு விழும் பதைபதைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
நல்வாய்ப்பாக லாரியில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.