புதியதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைக்கும் முடிவிற்கு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென்காசியில், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று 3 ஆண்டுகள் மட்டுமே முடிவு பெற்றுள்ளது.
ஆனால், மீண்டும் தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதை கைவிட்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.பாண்டியன், புதியதாக உருவான மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைக்கும் முடிவு தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், கால நீட்டிப்பு அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனவும் தெரிவித்தார்.