தென்கொரியா எல்லையில் ராட்சத பலூன் மூலம் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை வடகொரியா கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்துவரும் நிலையில், இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.
குப்பை மாதிரியை சேகரிக்கும் பணியில் எல்லைப் பகுதியில் தென்கொரிய ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆட்சேபத்துக்குரிய பொருட்கள் ஏதாவது கிடைத்தால், உடனடியாக தகவல் அளிக்குமாறு எல்லையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.