அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி PAY TM சேவை வழங்கும் ONE 97 COMMUNICATIONS நிறுவனத்தின் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த செய்தி உண்மையில்லை என்று , ONE 97 COMMUNICATIONS நிறுவனமும் , அதானி குழுமமும் ஒரே நேரத்தில் மறுப்பு தெரிவித்துள்ளன. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய இ காமர்ஸ் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இ காமர்ஸ் சந்தையில், டிஜிட்டல் வர்த்தகத்தில், ஆன்லைன் ஷாப்பிங் வசதியை வழங்க அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் அதானி குழுமம் , இ காமர்ஸ் தளத்தைத் தொடங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது
இதற்காக , ஓபன் நெட்வொர்க் எனப்படும் ONDC நிறுவனத்துடன் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இந்திய அரசால் நடத்தப் படும் ஒரு இ காமர்ஸ் தளம் தான் ONDC நிறுவனம்.
ONDC-யின் அனுமதி கிடைத்தால், அதானி குழுமம் , பல்வேறு வர்த்தகச் சேவைகளைத் தனது ஆப் மூலம் வழங்க முடியும்.
இதற்காக UPI சேவைக்கும் அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே சந்தையில் இருக்கும், GOOGLE PAY , PAY TM ,PHONE PE ,போன்ற டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் அதானி குழுமம் போட்டியிட தயாராகி விட்டது என்றே தெரிகிறது.
மேலும் கிரெடிட் கார்டு சேவையை வழங்கவும் அந்நிறுவனம் முடிவெடுத்து சில வங்கிகளுடன் பேச்சு வார்த்தைகளையும் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது.
இந்த திட்டத்துக்கு 16,600 கோடி ரூபாய் நிதி திரட்ட அதானி குழும நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் மூலமாக , இந்த நிதி திரட்டப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, அகமதாபாத்தில் அதானியை Paytm தலைமை செயல் அதிகாரி விஜய் சர்மா சந்தித்ததாகவும் , மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து முதலீட்டு நிதி பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்த்தியதாகவும் தகவல்கள் வெளியாயின.
PAY TM நிறுவனத்தின் பங்குகளை அதானி வாங்கப் போகிறார் என்று ரீதியில் தகவல் வெளியானதும், வணிக சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், இந்த செய்தி உண்மையில் என்று PAY TM மற்றும் அதானி நிறுவனங்கள் உடனடியாக மறுத்துள்ளன. மேலும் , PAY TM பங்குகளை அதானிக்கு விஜய் சேகர் ஷர்மா விற்கவில்லை என்று தெளிவுபடுத்தியதால் Paytm பங்கு விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது.அதே சமயம் அதானி குழுமத்தின் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டது.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் தடை காரணமாக, Paytm இன் வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. மார்ச் காலாண்டில் மட்டும் 549 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது PAY TM நிறுவனம்.
ஆன் லைன் வர்த்தகம், இ காமர்ஸ் டிஜிட்டல் வர்த்தகம் , டிஜிட்டல் வர்த்தக செயலிகள் தொழில்நுட்பத்தில் ஏற்படும் சந்தைப் போட்டியால் , மக்களுக்குத் தான் லாபமாக அமையும் என்று கூறப்படுகிறது.