GOLDEN TRIANGLE மர்மம்? சீன மாஃபியா கும்பலிடம் சிக்கும் இந்திய இளைஞர்கள்
Jul 29, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

GOLDEN TRIANGLE மர்மம்? சீன மாஃபியா கும்பலிடம் சிக்கும் இந்திய இளைஞர்கள்

Web Desk by Web Desk
May 29, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டில் வேலை என்று ஆசை காட்டி, இந்திய இளைஞர்களைச் சட்டவிரோத ஆன் லைன் மோசடிகளில் ஈடுபடுத்தி வரும் ‘ சீன மாஃபியா’ கும்பல் பற்றி அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு…!

லாவோஸ் ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். மொத்தம் 7.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டின் தலைநகரமாக வியன்டியன் விளங்குகிறது. இயற்கை அழகு மிக்க, இந்நாட்டுக்கு வடமேற்கில் சீனாவும் , மியன்மாரும் கிழக்கில் வியட்நாமும் ; தெற்கில் கம்போடியாவும்; மேற்கில் தாய்லாந்தும் எல்லைகளாக இருக்கின்றன.

லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் பொதுச் செயலாளரான ( Thongloun Sisoulith )தோங்லோன் சிசோலித் ஜனவரி 2021 ஆண்டில் இருந்து நாட்டின் தலைவராக இருந்து வருகிறார். 90 சதவீதம் விவசாயத்தை நம்பி இருக்கும் இந்த லாவோஸ் தான் இப்போது சீன மாஃபியா கும்பலின் பிரதேசமாக மாறி இருக்கிறது.

லாவோஸ், கம்போடியா மற்றும் கோல்டன் ட்ரையங்கிள் GOLDEN TRIANGLE என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தான் இந்த சீன மாஃபியாவின் சட்டவிரோத குற்றங்கள் நடக்கின்றன.

கடந்த வாரம் , இந்த மோசடிக்கு ஆள் சேர்க்கும் போலி முகவர்களுக்கு எதிராக இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் உட்பட ஏழு மாநிலங்களில் மொத்தம் 15 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினரால் தீவிர சோதனைகள் நடத்தப் பட்டன. இந்த சோதனையின் முடிவில்,மனித கடத்தல்,மற்றும் இணைய மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், குஜராத், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் வதோதராவைச் சேர்ந்த மணீஷ் ஹிங்கு, கோபால்கஞ்சைச் சேர்ந்த பஹ்லாத் சிங், டெல்லியைச் சேர்ந்த நபியாலம்ரே, ஹரியானாவை சேர்ந்த பல்வந்த் கட்டாரியா என்ற பாபி கட்டாரியா மற்றும் சண்டிகரைச் சேர்ந்த சர்தாஜ் சிங் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பிரபல யூ ட்யூபரான பாபி கட்டாரியா, எம்பிகே குளோபல் கன்சல்டன்சி என்ற ஆலோசனை சேவை நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரைச் சேர்ந்த இருவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி, ஒரு நபருக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பதிலாக, லாவோஸுக்கு அனுப்பப்பட்டதும் லாவோஸில் மக்களை ஏமாற்றும் போலி அழைப்பு மையத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய கட்டாயப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த இருவரும் சீன மாஃபியா கும்பலிடமிருந்து தப்பித்து லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக பத்திரமாக நாடு திரும்பி இருக்கின்றனர்.

இந்த பாபி கட்டாரியா மீது 2022 ஆம் ஆண்டில், விமானத்தில் புகைபிடித்ததாகவும், பொது இடத்தில் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாகவும், ஒரு பெண்ணை அடித்ததாகவும் , சமூக ஊடகங்களில் அந்த பெண்ணைப் பற்றி இழிவான கருத்துக்களைப் பகிர்ந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பல வழக்குகள் உள்ளன.

கைது செய்யப்பட்ட இந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சீன மாஃபியா எப்படி இயங்குகிறது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய இளைஞர்களை நல்ல சம்பளத்தில் தாய்லாந்தில் வேலை என்று அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால் லாவோஸில் சீன மாஃபியா போலி கால் சென்டர்களில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே, கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக ஒரு நாளைக்கு இடைவிடாமல் 15 முதல் 20 மணிநேரம் வரை வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள்.

அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்களிடம் கிரெடிட் கார்டு மோசடிகள் , கிரிப்டோகரன்சி மோசடிகள் மற்றும் ஹனி ட்ராப்பிங் போன்ற சட்டவிரோத ஆன்லைன் செயல்பாடுகளில் இந்திய இளைஞர்களை சீன மாஃபியா கும்பல் ஈடுபடுத்துவது தெரியவந்துள்ளது.

தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து லாவோஸுக்கு இந்திய இளைஞர்களைக் கடத்துவதற்கு வசதியாக சர்வதேச கடத்தல்காரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.

இந்த சதி நடவடிக்கைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் குறிப்பிடத்தக்க பல்வேறு குழுவினரால் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இளைஞர்களைக் கடத்தும் பல குழுக்கள் இந்திய மாநிலங்களிலும், ஐக்கிய அரபு அமீரகம், கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளிலும் சட்டவிரோதமாக செயல்படுகின்றன.

இதற்காக, போலி முகவர்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்றனர் என்று NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, லாவோஸில் இருந்து 13 இந்தியர்களை லோவாஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அட்டாபியு என்னும் மாகாணத்தில் உள்ள ஒரு மரத் தொழில் சாலையில் இருந்து ஏழு ஓடிசா தொழிலாளர்கள் உட்பட 13 இந்தியர்களையும் ,லாவோஸின் போக்கியோ மாகாணத்தின் கோல்டன் டிரையாங்கில் என்னும் சிறப்பு பொருளாதார மணடலத்தில் 6 இந்திய இளைஞர்களையும் வெற்றிகரமாக மீட்டிருப்பதாக லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 428 இந்தியர்கள் லாவோஸில் இருந்து இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்திய இளைஞர்களைக் குறிவைக்கும் சீன மாஃபியா கும்பலின் பின்னணியில் இருப்பவர்களை தேடும் பணியை தீவிரமாக்கி இருக்கிறது NIA. மேலும் பல கைது நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய இளைஞர்கள், வெளிநாட்டு வேலை ஆசையில் இப்படி போலி முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags: GOLDEN TRIANGLE MYSTERY? Indian youths fall prey to Chinese mafia gangs
ShareTweetSendShare
Previous Post

காற்றில் ஆடும் விளம்பர பதாகை- வாகன ஓட்டிகள் அச்சம்!

Next Post

E-COMMERCE சந்தையில் கால் பதிக்கும் அதானி?

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies