அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்ற வழக்குச் செலவுக்காக தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தை 85 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் பெற்ற டிரம்ப், ஏராளமான குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
இதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 76.7 மில்லியன் டாலரை செலவிட்ட அவர், நிதி நெருக்கடியால் தமது தனிப்பட்ட ஜெட் விமானத்தை விற்பனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.
அதன்படி குடியரசு கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரிடம் தனது ஜெட் விமானத்தை 85 கோடி ரூபாய்க்கு டொனால்ட் டிரம்ப் விற்பனை செய்துள்ளார்.