திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனை குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த விவரங்களை, அந்தந்த உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்கக் கோரி அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அதன் படிதிண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிபதற்கான நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.