திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடைந்து விழும் நிலையில் உள்ள விளம்பர பதாகையை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடி அடுத்த பெருவள்ளநல்லூர் பகுதியை கடந்து, தினமும் சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் அங்கு தனியாருக்கு சொந்தமாக விளம்பர பதாகை ஒன்று கிழிந்து காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் பதாகையை விரைந்து அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.