கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற காரும் அரசுப்பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த 6 பேர் ஒரே காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். வில்லுக்குறி அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் மோதியது.
இந்த விபத்தில் காரில் உள்ள 6 பேர் மற்றும் பேருந்து பயணிகள் என 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிக்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.