தமிழகம் வரும் மத்திய உள்துறை அமித் ஷா, புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்கிறார்.
வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திருச்சி வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
இதையடுத்து அங்கிருந்து தரைமார்க்கமாக புதுக்கோட்டை செல்லும் அமைச்சர் அமித்ஷா திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் அப்பகுதியிலுள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில் சென்று வழிபாடு நடத்துகிறார். மாலை 4.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து திருப்பதிக்கு செல்கிறார்.